பாஜகவுக்கு எதிராக கோஷம்! தமிழிசை மகனால் பரபரப்பு!

3314

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செயதியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகன் சுகநாதன் பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

இதை கண்டு அங்கு விரைந்த தமிழிசையின் பாதுகாவலர்கள் சுகந்தனை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், குடும்ப பிரச்சனை காரணமாக தனது மகன் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாக விளக்கமளித்தார்.

மேலும், ராஜன் செல்லப்பா பேசியது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் எனவும், தெரிவித்தார். இச்சம்பவம் பாஜக கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of