“அப்படி இப்படி.., இப்படி அப்படி..,” தமிழிசையின் நறுக் பேட்டி..!

432

சென்னை தியாகராய நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் சுய தொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்திருப்பது வெற்றிகரமான தோல்வி என்றும் திமுகவிற்கு கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தையும், காஷ்மீர்போல் மாற்றிவிடுவார்கள் என சில கட்சிகள் தவறான பரப்புரை செய்து வருகின்றன என்றும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of