தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – தமிழிசையின் “நச்” ஐடியா!

1029

சென்னையில் உள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழசை சவுந்திரராஜனை பல்வேறு மீனவர்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, இலங்கையில் 18 மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்காக கடிதம் மூலம் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழிசை சவுந்தரராஜன், அணுக்கழிவுகள் எந்த அளவிற்கு உள்ளது என கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்காமல் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களை பயமுறுத்தும் நடவடிக்கை என்று கூறினார்.

குடிநீர் பஞ்சத்தை நீக்குவதற்கு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்தில் அதிக அளவில் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of