“Wow what a punch”- TR-ஆக மாறிய தமிழிசை!

509

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த தமிழிசைக்கு, பாஜக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தமிழிசை, தனது 58-வது பிறந்தநாளை கட்சியினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதது வருத்தம் தான் என்றும் ஆனால் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை நினைத்து தமிழக மக்கள் வருந்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே திமுக தான் என்றும் ஆனால் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்.

தான் யாரையும் மிரட்டி ஓட்டு வாங்கவில்லை என்று தெரிவித்த தமிழிசை, நான் யாரையும் மிரட்டி பழக்கமில்லை, மக்களின் ஆதரவை திரட்டித்தான் பழக்கம் என்று கூறினார்.