“தமிழிசை போட்ட ஒரே ஒரு டுவீட்!” டோட்டல் மரியாதையும் “குளோஸ்”..,! என்ன சொன்னார் தெரியுமா..?

1184

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர்.

17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், நேற்று சட்டசபை கூடியது.

அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 95 வாக்குகளும். அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

மேலும், குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததால், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

“தென்னிந்தியாவில் தாமரை மலர்கிறது!

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி!

வாழ்த்தி வரவேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of