இன்னும் 15 நாட்கள் தான்..! ஆக்ஷனில் இறங்கிய தமிழிசை..!

773

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்திரராஜன். பாஜகவிற்காக உழைத்த தலைவர்களில் முக்கியமான ஒருவர். பலரின் கேலி கிண்டல்களுக்கும் தயங்காமல், ஒரு பெண்மணியாக இருந்து களத்தில் நின்றவர்.

இவரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, அதிகாரிகள் தங்களது பணிகளை சரிவர செய்ய வேண்டும் என்றும், நான் யோக செய்வது போல், தாங்களும் தினசரி யோக செய்து உடல்நலத்தை பேணி காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 15 நாட்களில் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு, மக்களிடம் உரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழில் அடுக்கு மொழி பல பேசி புகுந்து விளையாடிய தமிழிசை, தற்போது தெலுங்கிளும் தனது ஆக்ஷனை தொடங்கவுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of