பழங்குடியின பெண்களுடன் நடனம் ஆடிய தமிழிசை – வைரலாகும் வீடியோ

291

பழங்குடியினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு; தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், முலுகு மாவட்டத்தில் பழங்குடியினருக்கான பல்கலை.யை ஏற்படுத்த மத்திய அரசுடன் போச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கூறினார்.

மாணவியாக இருந்த காலத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினரை சந்தித்து அடிப்படை சுகாதார சேவைகளை செய்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

பழங்குடியினரிடம் இருந்து அரிய வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தவும், மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

இந்த சந்திப்பின் போது பழங்குடியின பெண்களுடன் சேர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடனம் ஆடியுள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.