அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றி! இப்போ பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம்! தமிழிசை!

486

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் தமிழிசையை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியேர் தூத்துக்குடியில் சங்கரப்பேரியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது வேட்பாளர் தமிழிசை பேசுகையில் அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றிதான். தற்போது அமித்ஷா பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம். தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of