அங்க பாத்தியா அப்ப இங்கயும் பாரு! ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை!

489

தூத்துக்குடி, குறிஞ்சி நகரில் உள்ள கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

“தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளதாகவும், அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை”

என்றும், தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழிசை அளித்துள்ள பேட்டி அவர் கூறியிருப்பதாவது:-

“ஆதாரங்கள் இல்லாமல் யார் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தாது. தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டிலும், ஆதாரங்கள் இல்லாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள்.

ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை கேட்டு, எனக்கு சிரிப்பதா, என்னவென்று தெரியவில்லை. நான் நேரடியாக வரி கட்டி நேர்மையாக சம்பாதித்துள்ளேன். என்னிடம் கோடி கோடியாக பணம் இருப்பதாக சொல்வதற்கு இதுவும் என்ன தேர்தல் களமா?.

கனிமொழி வீட்டில் நடந்தது என்றால் தமிழிசை வீட்டிலேயும் ரெய்டு நடைபெற வேண்டுமா? ஏட்டிக்கு போட்டியா இது?
எங்க வீட்டில் பார்த்தியா, அப்ப அவுங்க வீட்டிலேயும் பாரு என்று கூறுவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசுவது மாதிரியாகவா இருக்கிறது. வேலூரில் ஆதாரம் தெளிவாக கிடைத்திருக்கிறது.

துரைமுருகன் மற்றும் அவரது நண்பர் வீடுகளில் கிடைத்த பணத்தை எண்ணுவதற்கே இரவு 11 மணி ஆகியிருக்கிறது. 11 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்து தேர்தல் ரத்து செய்யக்கூடாதா? கனிமொழி இவ்வாறு பேட்டியளிக்க காரணம் என்ன?.”

இவ்வாறு தமிழிசை பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of