“லெஃப்ட் அன்ட் ரைட்..” நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ் ஸ்பீச்..! அசத்திய தமிழிசை..!

390

சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனியார் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பேசிய அவர், குழந்தைகளுக்கு சிப்ஸ், பர்கர் போன்ற உணவுகளை கொடுக்காமல் ஆரோக்கியமான, பருப்புகள் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்காப்பு கலை பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று குறிப்பிட்ட அவர் யாராவது அழுக்கான மனநிலையோடு அவர்களை அணுகினால் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்க, கராத்தே, கும்ஃபூ மட்டுமல்லாது நம்முடைய பாரம்பரிய கலைகளான சிலம்பம், களரி போன்ற கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of