ரைமிங்கில் ஜெ., வை புகழ்ந்து தள்ளிய தமிழிசை…

655

ஜெயலலிதா கரும்பாக இனிப்பவர், இரும்பாக உறுதியாக இருப்பவர் என்று அவரது பிறந்த நாளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் நினைவு கூர்ந்து வருகின்றனர். சென்னை ராயப் பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளையும்,தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுப்படுத்தி உள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனும் டுவிட்டர் மூலம் தமது நினைவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா அவர்கள் “கரும்பாக இனிப்பவர் இரும்பாக உறுதியாக இருப்பவர் ” அவர் என்மீது காட்டிய தனி அன்பும்,பண்பும் என்றும் என் நினைவில்… என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of