தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் புதுச்சேரி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் என்றும் தெற்கு ஆந்திரா கர்நாடகா ராயல சீமா ஆகிய பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 34 சென்டி மீட்டர் தான் பெய்ந்துள்ளது என்றும் 24 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் உட்பகுதிகளில் மூடு பனியும், நீலகிரி மாவட்டத்தில் உறைபனியும் நிலவும் என்று தெரிவித்தார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of