தபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்

161

தபால் டெலிவரி வேகம் முன்பை விட அதிகரித்துள்ளது. இதில், தமிழகம், நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லி முதலிடத்தில் உள்ளது. தபால் சேவையின், கடந்தாண்டு சாதனைப் பட்டியலை, தபால் துறை, சமீபத்தில் வெளியிட்டது.

இதில் தபால் டெலிவரி செய்ய எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் குறைந்துள்ளதாகவும் தாமதமின்றி விரைவிலேயே டெலிவரி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து தபால்களை டெலிவரி செய்யும் மாநிலங்களில் முதலிடத்தில் டெல்லி – 46 மணி நேரம் உள்ளது.

இரண்டாமிடத்தில் உள்ள தமிழகம் 66 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறது. கர்நாடகா – 74, மஹாராஷ்டிரா – 84, மத்திய பிரதேசம் – 85 மணி நேரம் என, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தெலுங்கானா – 112, அசாம் – 118, ஆந்திரா – 121, ஜம்மு காஷ்மீர் – 122, ராஜஸ்தான் – 134 மணி நேரம் என கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

நாடு முழுவதும்  ஒரு தபால் சராசரியாக 82 மணி நேரத்திற்குள் உரியவருக்கு டெலிவரி செய்யப்படுவதாக, தபால் துறை அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of