அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

448

வடக்கு உள் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 24மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் சென்னையில் மூன்று நாட்களாக பெய்த மழை காரணமாக தரையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்றும், தரை நிலை வெப்பம் இயல்பை விட அதிகமாகவும் மேல்நிலை காற்று குளிர்ச்சியாகவும் இருந்ததன் காரணமாக, இன்று காலை சென்னை மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி அதிகமாக காணப்பட்டது என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement