ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதல்வர்

424

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டுறவு, பொதுப்பணித்துறை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

ஏற்கனவே  நவம்பர் முதல் தேதியை  கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of