தாமரை கோலத்தை அழித்ததற்கு தமிழிசை ஆவேசம்!

398

ஸ்ரீ-வில்லிபுத்தூர் கோவிலில் திருவிழாவுக்காக போடப்பட்டிருந்த கோலங்களில் தாமரை இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, கட்சியின் சின்னம் என்று கூறி சுண்ணாம்பு கொண்டு அழிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்துள்ளனர்.

அது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் ‘கை’ காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது.

தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா?”

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of