ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா..? பாஜகவின் பகீர் டுவீட்..! திமுகவின் பதில் என்ன..?

234

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை கொண்டு வர இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், வழக்கம் போல் இருமொழிக்கொள்கையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தி நாள் அன்று, மத்திய அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த அளவிற்கு மக்கள் இந்த பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று. திமுக முதன்முதலில் ஆட்சியமைக்க காரணமாக இருந்ததும் இந்த மொழிப்போர் தான் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில், இந்தி மொழியில் எழுதப்பட்டிருக்கின்ற திமுக போஸ்டர் பதிவு செய்து, கீழே ஓட்டுத் தேவைக்கு மட்டும் இந்தி தொடர்பு மொழியாக இருக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த போஸ்டர் எப்போது அடிக்கப்பட்டது, எதற்காக அடிக்கப்பட்டது, எங்கு ஒட்டப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of