தமிழக பட்ஜெட் 2019-2020 : சென்னையில் விரிவான வாகன பார்க்கிங் திட்டம்

795

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.

அதில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக, சென்னையில் விரிவான பார்க்கிங் திட்டம் 2019-2020ல் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெடில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.2,000 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement