அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

389

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டு காலம் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.