கனிமொழி வீட்டு ரெய்டு இதுக்கு தானா? பரபரப்பு தகவல் வெளியீடு!

1286

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் எம்பி கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சத்யபிரதா சாகு தனது விளக்கத்தில், இது புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு நபரிடம் இருந்து தூத்துக்குடி ஆட்சியருக்கு புகார் வந்தது. மேலு கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பண புழக்கம் இருப்பதாகவும் பண பட்டுவாடா நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி வந்தது.

இது போன்ற புகார்களில் நாங்கள் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுபோல் இந்த புகாரும் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறைக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது.

இதை வைத்துதான் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனால் இந்த சோதனையில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் இந்த சோதனையில் எந்த விதமான பணமும் கைப்பற்றப்படவில்லை.

வீடு, அலுவலகம் இரண்டிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து இருக்கிறார். இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.

வெறும் போன் காலை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் செயல்படுவது தவறு என்றும் திமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

Advertisement