மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி சலுகை – முதலமைச்சர் உத்தரவு

379

உலகம் முழுவதும் கொரோனாவின் தாண்டவம் தான் தலைவிரித்தாடுகிறது. இந்த நோயினால் உலகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தடுப்பதற்கு பல்வேறு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, தகுதியான நிறுவனங்களின் மூலதனத்தில் 20 கோடி ரூபாய் உச்ச வரம்பாக கொண்டு, 30 சதவீதம் மாணியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதி பெறுவதற்கு காத்திருக்காமல், உற்பத்தியை தொடங்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சலுகைகள் ஹைட்ராசிக் குளோரோ குவினோன், அசித்ரோமைசின், விட்டமின் சி ஆகிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், உள்நுழைவு வெண்டிலேட்டர்கள், எண் 95 மாஸ்க்குகள் ஆகிய உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்ளுக்கு மட்டுமே பொறுந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of