கொரோனா பரவல்..! தமிழகத்தின் இன்றைய நிலை என்ன..?

181

தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 -ஆக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் ஆயிரத்து 842 பேரும், மொத்தமாக 66 ஆயிரத்து 538 பேரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 214 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of