தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு

414

தமிழகத்தில் மக்களவை  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் இன்று பல்வேறு கட்சிகள் மற்றும், சுயேட்சை வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தனர்.

வடசென்னையில்  திமுக சார்பில் போட்டியிடும்  கலாநிதி வீராசாமி தங்கசாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சிதங்கபாண்டியன் அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், திமுக தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.இதேபோல், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை ஆகியோரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். பெரம்பலூரில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, திருப்பூரில் இந்தியகம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தேனி தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.