தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் வழக்கில், இஸ்ரோ அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

726

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில், இஸ்ரோ அதிகாரிகள் ஆஜராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில், இஸ்ரோ அதிகாரிகள் ஆஜராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக மீன் வளத்துறை உதவி இயக்குனர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இஸ்ரோ கண்டுபிடித்துள்ள டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், நூறு கடல் மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கும் படகுகளின் இருப்பிடம் குறித்த தகவல்களை மீனவர்களுக்கு தெரிவிக்க முடியும் என்றும், இவற்றின் விலை 20 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய டிரான்ஸ்பாண்டர்கள் குறித்து விளக்கம் அளிக்க இஸ்ரோ அதிகாரிகளை ஆஜராக ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of