“இதுவே முதல்முறை..” கடலோர காவல் படையின் அணிவகுப்பு..! வழிநடத்தும் தமிழக பெண்..!

723

நாட்டின் 71-வது குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டு விருந்தினரை கவரும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களும் இடம் பெறும்.

இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு தலைமையேற்று வழி நடத்திச் செல்லும் அதிகாரிகளுக்கு என்றுமே தனி மரியாதை எப்போதுமே உண்டு. இந்த ஆண்டு இப்பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதேஆன பெண் கமாண்டன்ட் அதிகாரி தேவிகா என்பவரும் பெறுகிறார்.

இவர், குடியரசு தின விழாவில் 120 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்தி செல்கிறார். தமிழகத்தில் இருந்து இச்சிறப்பை பெறும் முதல் பெண் இவர்தான்.

தேவிகா, பொள்ளாச்சி அருகேயுள்ள மடத்துக்குளத்தை சேர்ந்த டி.செல்வராஜ் பத்மாவதி தம்பதியினரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.