மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

243
Tamilnadu-government

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில், மத்திய நீர்வள ஆணைய திட்ட அனுமதி இயக்குநர் என்.முகர்ஜி, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக காவிரி நீராவாரி நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் பி.குகே, கர்நாடக நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்று நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் கர்நாடகமோ, மத்திய அரசோ ஈடுபடாமல் இருக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.