மீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை

511

கேரளா மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் தளத்தோப்பு, முத்துப்பேட்டை, கீழ்மாங்குண்டு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 40 மீனவர்கள் மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அருகில் உள்ள கடலோர பகுதிகள் வழியாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் கேரளாவின் காத்தங்கோடு மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 படகுகளில் சென்றிருந்த தமிழக மீனவர்கள் 40 பேரை சிறைபிடித்தனர்.
தங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால் படகு ஒன்றிற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் கொடுத்தால்தான் மீனவர்களை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மங்களூர் விசைப்படகு உரிமையாளர்கள் கேரளா மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் பணம் செலுத்திய 3 படகுகளில் இருந்த 30 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள படகில் இருந்த 10 மீனவர்கள் தாங்கள் பணம் செலுத்தாததால் விடுவிக்கப்படவில்லை என வீடியோ மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of