தமிழக அரசிடமிருந்து சான்றிதழ் பெற்ற சினேகா – எதற்கு தெரியுமா?

226
sneha thirupathur

திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு சாதி,மதம­­­ற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா. வழக்கறிஞரான இவருக்கு, பிறந்ததிலிருந்து சாதி, மதம் போதிக்காமல் வளர்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை தன்னுடைய சாதி,மதம் என எதையும் குறிப்பிடாமல் வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.

sneha

சிறு வயதிலிருந்தே சாதி,மதம் இல்லாமல் வாழ்ந்து, அரசிடம் சான்றிதழ் பெற வேண்டும் என லட்சிய வேட்கையோடு பயணித்த சினேகா, பள்ளி படிப்பு இறுதியில் சாதி மதம் அற்றவர் என்ற அடையாளத்தை அரசின் மூலம் பெற நினைத்தார்.

இதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் அளித்ததற்கான முன்னுதாரணங்கள் இல்லை என கூறி அதிகாரிகள் அவரது கோரிக்கையை நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சினேகாவிற்கு  அரசின் சார்பில் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வட்டாட்சியர் வழங்கினார்.