பால் விலை உயர்வு… – தயிர், மோர், நெய் விலையும் உயரும் அபாயம்

565

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் உயர்ந்து 32 ரூபாயாகவும், எருமைபால் கொள்முதல் விலை 6 ரூபாய் உயர்ந்து 41 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், அனைத்து வகை ஆவின் பால் விற்பனை விலையும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பால் விலை உயர்விற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆவின் பால் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியலில்..,

500 மி.லிட்டர் ஆவின் நைஸ் (நீலம்) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயாகவும், அதிகபட்ச விலை 21 ரூபாய் 50 காசுகளாகவும் விற்கப்படுகிறது. 500 மி.லிட்டர் ஆவின் மேஜிக் (பச்சை) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு 22 ரூபாய் 50 காசுகளாகவும், அதிகபட்ச விலை 23 ரூபாய் 50 காசுகளாகவும் விற்பனையாகிறது. 500 மி.லிட்டர் ஆவின் க்ரீம் பால் (ஆரஞ்சு) அட்டைதாரர்களுக்கு 24 ரூபாய் 50 காசுகளாகவும், அதிகபட்ச விலை 25 ரூபாய் 50 காசுகளாகவும் விற்பனையாகிறது.

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தனியார் பால் விலைகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தயிர், மோர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் என்று தெரிகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of