பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒரு ரூபாய் குறைக்க தமிழக அரசு முடிவு

1160

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

ஒரு சில மாநில அரசுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளன.

இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement