ஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்? தகவல் வெளியீடு

1131

நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையி, நாளை மறுதினமான ஜூன் 1 முதல் தமிழகம் முழுவதும் பேருந்து இயக்கம் பரவலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

குறிப்பாக தொற்று பாதிப்பு குறைவான மாவட்டங்களில் அதிக அளவு பேருந்தும், அதேபோல தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் முன்கூட்டியே பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றன.

அதேபோல விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் தயார் படுத்தக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தொலைதூர பேருந்துகளில் அதிகபட்சமாக 26 நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பயணிகள் பேருந்தில் அனுமதிக்கப்படுவர்.

குறைவான பயணிகளோடு பேருந்தை இயக்குவதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர். இதனால், விரைவில் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் பேருந்து கட்டண உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதை முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of