நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களின் புள்ளி விவரம்..! தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா..?

372

இந்தியாவில் நடக்கும் மொத்த குற்றச்சம்பவங்களின் புள்ளி விபரங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த குற்றச்சம்பவங்களின் புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது பின்வருமாறு:-

குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டை பொறுத்தவரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 வழக்குகள் பதிவாகியுள்ளன.

குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டை பொறுத்தவரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

மூன்றாம் இடத்தில் மத்திய பிரதேச மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. முறையே 4, 5, 6-ஆம் இடங்களில் கேரளா, டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையில் 7-ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. 2017-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், 2016-ஆம் ஆண்டை விட 2017-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of