கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது -முதலமைச்சர் பழனிசாமி

221

தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னையில் முப்பெரும் விழாவாக இன்று நடைபெற்றது.

இவ்விழாவில், 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், முதல் முறையாக மாணவர்களுக்கு காமராஜர் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கருவறையும் ஆசிரியர் உள்ள வகுப்பறையும் முக்கியமானது என்றும், கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது எனவும் கூறினார்.

கல்வி துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத வகையில் காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுவதாக தெரிவித்தார்.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here