தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு இத்தனை பேர் மனு தாக்கலா?

406

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 236 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 136 பெண்கள், 2 திருநங்கைகள் உட்பட ஆயிரத்து 236 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று 18 தொகுதி இடைத்தேர்தலில் 43 ஆண்கள், 75 பெண்கள் என மொத்தம் 436 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிக்காக  நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு வரும் 29ஆம் தேதி நிறைவடைவதுடன், அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட உள்ளது.