ஹெல்மெட் எங்கே..! சார் இது சைக்கிள்..! அதெல்லாம் தெரியாது..! போலீசின் அதிரடி முடிவு..!

1129

மத்திய புதிய வாகன சட்டத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று அமல்படுத்தியது. முன்பு விதிக்கப்பட்ட அபாரதத்தொகையை விட, தற்போது பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த அபராதத்தொகைக்கு பயந்தே பலரும் விதிகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் சைக்கிளில் வருகிறான்.

அவனை மடக்கிப்பிடிக்கும் காவல்துறை அதிகாரி, ஹெல்மெட் போடாததால் அந்த சைக்கிளிலை தூக்கிச் செல்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஒரு மோட்டார் வாகனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றால், அந்த வண்டியின் நம்பர், ஓட்டுநர் உரிமத்தை வைத்து தான் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் இதில் இரண்டுமே இல்லாத அந்த சிறுவனிடம் எதற்காக, போலீஸ் இவ்வாறு செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த போலீசின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த சைக்கிளை எடுத்து சென்ற போலீஸ், ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த சிறுவனிடம் திரும்ப கொடுத்தாகவும் கூறப்படுகிறது.