2031-ல் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்பு! மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி!

1073

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் சரி, வீழ்ச்சிக்கும் சரி மக்கள் தொகை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில் 2-ஆம் இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் குறைந்த அளவு வித்தியாசமே உள்ள நிலையில், இந்திய முதலிடத்திற்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், வரும் 2031 – 2041ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகையின் வளர்ச்சி என்பது சரிவு நிலையில் செல்ல வாய்ப்பு உள்ளதாம். அதுவும் 0.05 சதவீதத்திற்கு குறையுமாம்.

இதனால், தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் அதாவது 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதாவது, 2041ம் ஆண்டில் தென்மாநிலங்களில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் 59 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்தான் சற்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

அதாவது சமீபத்திய பத்து ஆண்டுகளில் மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது வேகமாகக் குறைந்து வருவதும், 2021ம் ஆண்டுகளில் மரணத்தை விட, குழந்தை பிறப்பு குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of