கொரோனா பீதி – தமிழக சிறைகளில் கைதிகளுக்கு ஜாமீன்

551

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதிகள் உள்பட 136 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை விடுவிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர், நன்னிலம் கிளை சிறைகளில் இருந்து ஆண்,  பெண் கைதிகள் 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் சிறையில் இருந்து 11  பெண் கைதிகளும், நன்னிலம் கிளை சிறையில் இருந்து 11 ஆண் கைதிகளும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் இருந்து பெண் கைதிகள் உள்பட 44 கைதிகளை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் 8 வரை வீடுகளில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 62 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.