தமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

566

தமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி புழல் சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷிணி, புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், வேலூர் சிறை கண்காணிப்பாளராகவும், கடலூர் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷண்ராஜ், கோவை சிறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன் திருச்சி சிறை கண்காணிப்பாளராக, திருச்சி சிறைத்துறை கண்காணிப்பாளர் நிஜிலா நகேந்திரன், கடலூர் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைகளில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of