தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

687

தென்கிழக்கு அரப்பிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, மினிக்காய் தீவுகளுக்கு அருகில், வடமேற்கு திசையில் 920 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது, அடுத்த 24மணி நேரத்தில் புயலாக மாறி ஓமன் கரையை நோக்கி நகரும் என்று தெரிவித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளது.

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒரிசா கரையை நோக்கி நகரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி வரையும், தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு வரும் 9ஆம் தேதி வரையும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement