தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 24 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பெய்த மழை அளவு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பொருத்தவரையில் பதிவான மழையளவு 34 சென்டிமீட்டர் என்றும், இது இயல்பைவிட 24 சதவீதம் குறைவு எனவும் தெரிவித்தார். 2018 வடகிழக்கு பருவமழை நான்கு மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது என்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் என கூறிய பாலச்சந்திரன், எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தள்ளிப்போனதால் மழை இல்லை என்றும், , 4 புயல்களில் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டதும், மழையின் அளவு குறைய காரணம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of