தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை

685

சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்தது.

எழும்பூர், செண்ட்ரல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சூளைமேடு, அண்ணசாலை, கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி என சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான திருவெற்றியூர், எண்ணூர், மணலி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கு கெடுத்து ஓடியது.

Advertisement