மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

829

மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், அரபிக் கடல், வங்கக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, இந்திய கடற்பரப்பில் இருந்து வெளியே செல்லுமென தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement