வானிலை மைய அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய வெதர்மேன்..! பேஸ்புக்கில் போட்ட அதிரடி பதிவு..!

405

வானிலை ஆய்வு மையம் வானிலை தொடர்பான செய்திகளை கொடுத்து வந்த நிலையில், தற்போது வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் என்பவரும் தனது பேஸ்புக் பக்கத்தில் வானிலை தொடர்பான செய்திகளை அளித்து வருகிறார்.

நெட்டிசன்கள் மத்தியில் இந்த வெதர்மேன் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வானிலை மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். என்னை ரெட் தக்காளி, டாமல் டுமீல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், நான் பரபரப்பையும், அறிவியலை துஷ்பிரியோகம் செய்கின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நான் என்ன அப்படி செய்தேன். இதுவரை 200-லிருந்து 300 முறை ஊடகங்களிலிடமிருந்து போன் கால் வந்துள்ளது.

இதுவரை நான் ஒருமுறை கூட போன்காலை எடுத்து பேசியதில்லை. காரணம் நான் தனியாகச் செயல்பட விரும்புகிறேன். இந்தப் புகழுக்காக நான் எழுதவில்லை.”

என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்றால், என்னால் 100-தவறுகளை உங்களிடம் இருந்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் வரம்பு என்ன என்பது எனக்கு தெரியும்” என்று பளீரென்று தெரிவித்துள்ளார்.