கொத்தடிமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்

918

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களின் இரண்டாண்டு பயிற்சி நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில், சிறகை விரிக்கும் சிம்புட் பறவைகள் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனி மனிதனின் உழைப்பை சுரண்டுவது மிகப்பெரிய குற்றம் என தெரிவித்தார். கொத்தடிமை தனத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், கொத்தடிமைகள் இல்லா தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மாநில அளவில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் குடிசைகளில் வாழும் பண்ணிரெண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 2023ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of