தமிழகம் தனித்து நிற்கிறது – கனிமொழி

394

நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது தமிழகம் தனித்து நிற்பதை காட்டுகிறது என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எனது வெற்றிக்கு உழைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் தூத்துக்குடி மக்கள் சாதி, மதங்களை வைத்து வாக்களிக்க மாட்டார்கள். அதைத் தாண்டி யார் இந்த நாட்டிற்கு தலைவராக வரவேண்டும் என புரிந்துகொண்டு திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.

நாடு முழுவதும் பாஜகவின் வெற்றி அலையைத் தாண்டி, தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இது தமிழகம் தனித்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

யார் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுமதியோடு அதை நான் செய்வேன் என்றார் அவர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of