தமிமுன் அன்சாரிக்கு நாட்டின் சிறந்த இளம் MLA விருது

956

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று, நாட்டில் உள்ள முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில், சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருதிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியை தேர்வு செய்தது.

இந்தநிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில், நாட்டின் சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின் பேசிய தமிமுன் அன்சாரி, எல்லாப் புகழும் இறைவனுக்கே, தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என தெரிவித்தார். இந்த விருதை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of