தங்கத்தமிழ்செல்வன் போட்ட டுவிட்டர் பதிவு..! அதிர்ந்து போன திமுகவினர்

1045

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் அக்கட்சியிலிருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுக மற்றும அதிமுக கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கத்தமிழ்செல்வன் பகிர்ந்த செய்தியால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமமுக கட்சியில் தங்க தமிழ்ச்செல்வன் இருக்கும் போது கட்சி சார்பாக வரும் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் திமுகவில் இணைந்த பின்பும், அமமுக சார்பில் அழகு முத்துகோன் தின சிறப்பு குறித்து வெளியான அறிக்கையை, தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பின்பு சுதாரித்து கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் சிறிது நேரம் கழித்து அந்த போஸ்ட்டை நீக்கியுள்ளார். திமுகவில் இணைந்த பின்னும் அமமுக கட்சியின் அறிக்கையை ஷேர் செய்தது சிறிது நேரம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of