மோடிக்காக பிரச்சாரம் செய்த நபர் கொலை செய்யப்பட்டாரா? இல்லவே இல்லை! போலீசார் விளக்கம்!

519

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் புகைப்படம், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கோபிநாத் என்ற இளைஞரால் இவர் தாக்கப்பட்டார். காயங்களுடன் வீட்டிற்கு சென்ற இவர் இரவு பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இணையத்தில் அதிமுக – பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர்.

இந்த கொலையை செய்த கோபிநாத் திமுகவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் இந்த கொலை குறித்து ஒரத்தநாடு போலீசார் திடுக்கிடும் உண்மைகளையே வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதன்படி கொல்லப்பட்ட கோவிந்தராஜுக்கு மனநலனில் சிறிய சிறிய பாதிப்புகள் இருந்திருக்கிறது. மனரீதியான சில பிரச்சனைகள் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார். அப்போது, அவர் கோபிநாத் வீட்டில் பிரச்சாரம் செய்த போது கோபிநாத்தை தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்த மக்களும் இதை சாட்சியாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று போலீசார் கூறி உள்ளனர். தகாத வார்த்தையில் திட்டியதால் வாய் சண்டை பெரிதாகி உள்ளது. இதில் வந்த சண்டையில்தான் கொலை நடந்துள்ளது. அதேபோல் கொலை செய்த கோபிநாத் எந்த விதத்திலும் திமுகவுடன் தொடர்பு இல்லாதவர்.

திமுகவின் உறுப்பினர் கூட கிடையாது அவர். இது அரசியல் கொலை இல்லை, கோபத்தில் கோபிநாத் செய்த கொலை என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of