தான்சானியா படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரிப்பு

792

தான்சானியா நாட்டில், படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது.

படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய விபத்தில் பலர் பலியாகினர்.

இதனையடுத்து, விபத்தில் 207 பலியானதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 224 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement