தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

361
Tanzania-boat-accident

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா என்ற மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது.

தான்சானியா நாட்டில் இந்த ஏரி வழியாக, உகாரா தீவில் இருந்து பகோலோரா தீவிற்கு 400க்கும் மேற்பட்டோர் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 136 பேர் உயிரிழந்தனர்.

மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே இந்த விபத்து நடந்ததற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். மேலும், நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here